பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக எதிரெதிர் திசையில் இருந்த வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்க்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடுமையான பனி காரணங்க சிந்து நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்ற நெடுஞ்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.