தேசிய விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம்

2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் 1 படம் 4 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்காக மணிரத்னத்துக்கும், சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர் ரஹ்மானுக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ரவி வர்மன் மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு பிரிவிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கும், சிறந்த நடன இயக்கம் என்ற பிரிவிற்காக ஜானி மாஸ்டருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News