தமிழகத்தில் இதுவரை ரூ.68 கோடி ரூபாய் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அலுவலர்!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைய உள்ள நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3.06 கோடி பேர் ஆண்கள், 3.16 கோடி பேர் பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் 39 உள்ளது.

தமிழகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர் உள்ளனர். மாற்று திறனாளி வாக்காளர்கள் 4,61,730 பேர் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்ரல் 7-க்குள் முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.

39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 190 கம்பெனி ராணுவம் பயன்படுத்தப்படவுள்ளன. நேற்றுவரை ரூ.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” என்று சத்யபிரதா சாஹு கூறினார்.

RELATED ARTICLES

Recent News