சென்னை மாதவரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சேமிப்பு கிடங்கில் கண்டெய்னர் லாரி மூலமாக 6000 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட சுங்கவரித்துறை அதிகாரிகள் கண்டெய்னர் லாரியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 6000 கிலோ குட்கா புகையிலை பொருளைக் கைப்பற்றினர். மேலும் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் 48 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா, புகையிலை, போதை பொருட்களை மாதவரத்தில் கன்டெய்னர் மூலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் சென்னை வழியாக கப்பலில் சிங்கப்பூருக்கு கடத்திச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.