நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டம நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். 60 வயதாகும் இவர், அப்பகுதியில் ஜோதிடராக இருந்து வந்தார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தன்னிடம் ஜோசியம் பார்க்க வரும் கணவனை பிரிந்து வாழும் பெண்களை, தன் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உறவு கொள்வதை சுந்தர்ராஜன் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த அவரது மனைவி பேபி, தனது கணவரை பிரிந்துவிட்டார். இருப்பினும் லீலைகளை நிறுத்தாத சுந்தர்ராஜன், கடைசியாக பரமேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ள உறவில் இருந்து வந்தார். இந்நிலையில், சுந்தர்ராஜன் தனது வீட்டில் நேற்று காலை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், விசாரணையை ஆரம்பித்தனர். அதில், சுந்தர்ராஜனின் கள்ளக்காதலியான பரமேஸ்வரிக்கு, வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த அவர், காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் உடனான தொடர்பை துண்டிக்க மறுத்த பரமேஸ்வரி, தனது காதலுக்கு இடையூறாக இருந்த ராஜேந்திரனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சுந்தர்ராஜன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, சத்தம் இல்லாமல் வந்த பரமேஸ்வரியும், அவரது காதலனும், கத்தியை எடுத்து, குத்தி கொலை செய்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.