2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். இதில் ஆர்ஆர்ஆர் படம் 6 தேசிய விருதுகளை அள்ளி சென்றுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய கிங் சாலமனுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருதும், சிறந்த நடன இயக்குநருக்கான விருது பிரேம் ரக்ஷித்துக்கும், தொழில்நுட்ப கலைஞர் சீனிவாஸ் மோகனுக்கும் கிடைத்துள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஆர்ஆர்ஆர் படத்துக்கு இசையமைத்த கீரவாணிக்கும் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிறந்த பொழுதுபோக்குப் படமாகவும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு விருது கிடைத்துள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற கோமுராம் பீமுடு பாடலைப் பாடிய பின்னணி பாடகர் கால பைரவாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது கிடைத்துள்ளது.