கோவையில் கொடிக் கம்பம் நட முயன்ற பாஜகவினர் 50 பேர் கைது..!!

சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே புதிதாக வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பாஜக கொடி கம்பம் உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது நடந்த ரகளையில், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது : நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும், வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை பனையூரில் பத்தாயிரமாவது பாஜக கொடிக் கம்பம் நடப்படும் என அறிவித்திருந்தார்.

சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை மாநகராட்சியும் கொடிக் கம்பம் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் வைத்தால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் அருகே திரண்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக மாநிலத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

RELATED ARTICLES

Recent News