பொள்ளாச்சி அருகே மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 4,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

பொள்ளாச்சி அருகே செமனாம்பதி கிராமத்தில் மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் டோனி இவருக்கு சொந்தமான மாந்தோப்பு தமிழக கேரள எல்லை பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ளது. இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது தோட்டத்தில் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பதாக கேரள மாநில கலால் துறை போசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் கேரளா போலீசார் தமிழக போலீசார் உதவியுடன் இரு மாநில போலீசார் சம்மந்தப்ட்ட தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொண்ட 150 கேண்களில் 4500 லிட்டர் எரிசாரயம் இருந்தது தெரிய வந்ததது பின்னர் எரிசாராய கேன்களை பறிமுதல் செய்த ஆனைமலை போலீசார் தோட்ட உரிமையாளர் மருத்துவர் டோனி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் கள் வானத்தில் எரிசாரயத்தை கலந்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News