சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும் போது மின்சாரம் பாய்ந்து நான்கு பேர் உயிரிழந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாப்பண்ணா கவுடு இந்தியாவில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு சிலை திறப்பு விழாவை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தடிப்பூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிலை திறப்பு விழா இன்று (நவ.3) நடைபெற இருந்த நிலையில் நேற்று (நவ.4) இரவு அந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் பிளக்ஸ் பேனர்களை வைக்க ஏற்பாடு செய்த போது எதிர்பாராத இரும்பு பைப் மின்சார வயரில் மோதியது.
இதனால் மின்சாரம் பாய்ந்து பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த வாலிபர்கள் நான்கு பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மரணமடைந்த வாலிபர்கள் நான்கு பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.