தமிழ்நாட்டில் தரம் உயர்த்தப்பட்ட திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு அறிவித்தார்.
இதன்படி, நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்தது.