தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர்.
தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில், ஆர்.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், எஸ்.எம்.நாசர் ஆகிய 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர், அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.