உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமரின் வழிபாட்டு தலம் கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள்கள் போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் 4 பெண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.