பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது- 8 பைக்குகள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

புகாரை தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் குடியாத்தம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே இன்று போலீசார் உள்ளி கூட்ரோடு மற்றும் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக வந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தினகரன் (வயது25)சந்தோஷ்குமார் (வயது28)நேதாஜி(வயது35) சந்தோஷ் (வயது23) ஆகிய 4 பேரை குடியாத்தம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இரு சக்கர வாகனத்திற்கு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News