கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக ரேஷன் அரிசி கடத்தியவர்களை வாகனத்தோடு பிடித்து 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளுடன் குடிமைப் பொருள் பாதுகாப்புத் துறையினர் வேப்பூர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரேஷன் அரிசி புரோக்கராக பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் சசிகுமார் ரேஷன் அரிசி புரோக்கராக செயல்பட்டு வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் லூர்துசாமி மகன் சாமுவேல் 39 என்பவர் டாட்டா ஏசி வாகனம் ஓட்டுனராக பணியாற்றினார் சேலம் மாவட்டம் ஆத்தூர் கணேசன் மகன் ரமேஷ் 39 ரேஷன் அரிசி கடத்தியதுக்கு உதவியாக வாகனத்தில் சென்றார்.
மேற்படி நபர்கள் இன்று காலை பெரிய நெசலூர் கிராமத்திலிருந்து TN 32 AZ 4555 என்ற எண் பதிவு கொண்ட மகேந்திரா பொலிரோ பிக்கப் வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட சுமார் 22 மூட்டைகள் ரேஷன் அரிசி விற்பனைக்காக கள்ளக்குறிச்சிக்கு ஏற்றி சென்ற நபர்களை குடிமைப் பொருள் பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் வேப்பூர் போலீசார் பிடித்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மேற்படி நபர்களை குடிமை பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் கடலூருக்கு அழைப்பு சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.