சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களின் நம்பிக்கையான சனாதனத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பேச்சை வெளிப்படுத்தியதற்காக மாநில அரசே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள், 130 முன்னாள் அரசு அதிகாரிகள், 118 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கையொப்பமிட்டு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.