நாட்டின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதிகாரிகளில் பட்டியல், ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி டில்லி பாபு, டிஎஸ்பி சங்கு, ஏஎஸ்பி ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.