தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி, தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 22 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை மன்னார் தென் கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து 22 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், தருவைகுளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமிபதி-யை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் 22 மீனவர்களையும் படகையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் 20ந் தேதிக்குள் மீட்டு தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்துள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க கூறினர்.

RELATED ARTICLES

Recent News