தமிழ்நாடு சட்டபேரவையில் 2024 – 2025 ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரை: இந்த அரசுக்கு என்று மாபெரும் தமிழ் கனவு உண்டு, ஒன்று சமூக நீதி கடைக்கோடி தமிழர் நலன் உலகை வெல்லும் இளைய தலைமுறை பசுமை வழி பயணம் உள்ளிட்ட 7 இலக்குகளை முன்னிறுத்தியே இந்த பட்ஜெட் உருவாக்கபட்டுள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இனிவரும் காலங்களில் 600 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்.