பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு 2 கோடி ரூபாய் செலவில் 200 பிங் ஆட்டோக்கள் இயக்கபடும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அமைச்சர் கீதா ஜீவன் 32 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர்,
சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூபாய் ஒரு லட்சம் விதம் 200 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி இரண்டு கோடி ரூபாய் செலவில் 200 இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோக்கள் இயங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 72,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
முதியோர் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ மாநில அரசு மானியம் பெறும் 23 முதியோர் இல்லங்கள் மற்றும் 44 ஒருங்கிணைந்த வளங்கங்களில் உள்ள 2020 முதியோர் பயனடையும் வகையில் 40.20 லட்சம் ரூபாய்க்கு மதிப்பில் யோகா முச்சுப்பயிற்சி தியான பயிற்சி போன்றவை தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் பயிர்விக்கப்படும்.
ஐம்பெண் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிழும் பெண்களின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மானியம் கைம்பெண் முதல் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணி புரியும் மகளிர் விடுதிகள் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறை எளிய ஆளுமை திட்டம் மூலம் எளிதாக்கப்படும்.
அரசு நிறுவனங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பினை கண்காணிக்க குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இயக்குனர் ஆற்றில் ஒருங்கிணைந்த சிறப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 54,449 குழந்தைகள் மையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5590 குழந்தைகள் மையங்களில் 55.90 கோடி ரூபாய் அளவில் குழந்தை கள் மையங்களாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.