செல்போன் மீது ஆசை.. கடலோரம் நடந்து சென்றவர் கொலை.. இளைஞர்கள் கைது..

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அண்ணா நகர் குடிசைப் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவரும், அதே பகுதியை சேர்ந்த சாமுவேலும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், காசிமேடு கடற்கரை பகுதியில் மது அருந்திய இவர்கள் இருவரும், அப்பகுதி வழியாக நடந்து சென்றவரிடம் செல்போன் பறிக்க முயன்றுள்ளனர்.

அதனை அந்த நபர் தடுக்க முயன்றதால், கீழே கிடந்த கல்லை எடுத்து, தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, உடலை எடுத்து, கடலில் வீசிய இருவரும், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

செல்போனுக்காக இளைஞரை கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News