தனியாக பேசிக் கொண்டிருந்த மகனும்-சித்தப்பாவும்.. திடீரென புகுந்த மர்ம நபர்கள்.. கொடூர சம்பவம்..

தென்காசி அருகே, சொத்து தகராறில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும், இவரது உறவினர் சுரேஷ் என்பவருக்கும், சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அசோக் குமார், தனது சித்தப்பாவுடன், நேற்று வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த கொடூர தாக்குதலில், அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த அவரது சித்தப்பாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி, அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், அசோக் குமாரின் உறவினர் சுரேஷ்-க்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும் காவல்துறையினர், அவரை பிடித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News