எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் அதிலிருந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மேலும் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இலங்கை கடற்படையினர் வலைகளை வெட்டி கடலில் வீசியதால் படகு ஒன்றுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பி வருகின்றனர்.
இலங்கையில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற ஐந்து நாட்களில் 17 தமிழக மீனவர்கள் இரண்டு படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வானத்தை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டி அடித்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.