ரீல்ஸ் மோகம்.. 6-வது மாடியில் இருந்து குதித்த 16 வயது சிறுமி!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள இந்திராபுரத்தை சேர்ந்தவர் மோனிஷா. 16 வயதான இவர், தனது வீட்டின் மொட்டை மாடியில், ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, நிலைதடுமாறிய மோனிஷா, 6-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த பெண்ணின் கால் எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது. மேலும், பல்வேறு உள்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, அந்த பெண் 6-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், வலியால் துடிக்கும் வீடியோ, இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மோனிஷாவை அவரது தாய், திட்டுவதும், பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News