லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து : 13 பேர் உடல் கருகி பலி

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது குணா-ஆரோன் என்ற இடத்தில் எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News