தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 91.55% தேர்ச்சி- முழு விவரம்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்தாண்டு பத்தாம் வகுப்பில் 8,94,264 மாணாக்கர்கள் தேர்வெழுதி உள்ளனர். இதில் 4,47,061 மாணவிகளும், 4,47,203 மாணவர்களும் அடக்கும்.

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்: 8,18,743 (91.55 %)
மாணவியர் 4,22,591 (94.53 %) தேர்ச்சி
மாணவர்கள் 3,96,152 (88.58 %) தேர்ச்சி
மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை – 4105.
100 % தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை- 1364.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

அரசுப் பள்ளிகள் 87.90%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43%
இருபாலர் பள்ளிகள் 91.93%
பெண்கள் பள்ளிகள் 93.80%
ஆண்கள் பள்ளிகள் 83.17%

பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் 96.85 %
ஆங்கிலம் 99.15%
கணிதம் 96.78%
அறிவியல் 96.72%
சமூக அறிவியல் 95.74%

100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை

தமிழ் 8
ஆங்கிலம் 415
கணிதம் 20691
அறிவியல் 5104
சமூக அறிவியல் 4428

தேர்வெழுதிய 13510 மாற்றுத் திறனாளிகளில் 12491 (92.45%) தேர்ச்சி

தேர்வெழுதிய 260 சிறைவாசிகளின் 228 (87.69 %) பேர் தேர்ச்சி.

RELATED ARTICLES

Recent News