உகாதியை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான மலர்களால் அலங்கரித்துள்ளது.
தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சுமார் பத்து டன் எடையுள்ள உள்நாட்டு மலர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கோவில் முன் வாசல், தங்க கொடிமரம், பலிபீடம், கோவிலின் உட்பகுதி ஆகியவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் கண்கவர் வகையில் அலங்கரித்துள்ளது.
இதனால் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்திருக்கும் பக்தர்கள் மெய்மறந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் உகாதியை முன்னிட்டு ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அப்போது தேவஸ்தான வேத பண்டிதர்கள் புதுவருட பஞ்சாங்கத்தை படித்து பலன்களை தெரிவிப்பார்கள்.