“சிங்கத்தின் முதல் கர்ஜனை..” ஜனநாயகன் படத்தின் புது அப்டேட்..!!

தளபதி விஜய்-ன் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், மற்றும் நரேன் என பல நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தளபதி விஜய்-ன் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடனம். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் வர அதை உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக மற்றொரு குட் நியூஸை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜயின் பிறந்த நாள் நாளை அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜனநாயகன் படக்குழுவினர்., அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

முன்னதாகவே படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. மேலும் அவரது ரசிகர்கள் சிங்கத்தின் முதல் கர்ஜனை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News