திருப்பதி ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் விலை உயர்ந்த ஐபோனை திருடிய இளைஞரை. பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்து செல்போன் மீட்பு
திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16779 என்ற விரைவு ரயிலில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷில்பி(25) என்ற பெண் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக s6 கோச்சில் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர் தனது iphone 15 pro maxஜ ரயிலில் சார்ஜர் போட்டுள்ளார். மயிலாடுதுறைக்கு ரயில் வந்த போது ரயிலில் இருந்து கீழே இறங்கி நின்று விட்டு மீண்டும் ரயிலில் ஏறி தன் இருக்கைக்கு சென்றபோது தான் சார்ஜ் போட்டு வைத்திருந்த ஐபோனை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
உடனடியாக ஷில்பி ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோல் ரூமுக்கு புகார் தெரிவித்து விட்டு ராமேஸ்வரம் சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ஏ.எஸ்.ஐ சிவக்குமார் என்பவர் விசாரணை மேற்கொண்ட போது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நின்றிருந்த 35 வயது மதிக்கத்தக்க நபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் ஐபோன் இருந்தது தெரியவந்தது.
ரயிலில் சார்ஜரில் இருந்த செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டார். சீர்காழி ஈசானிதெருவை சேர்ந்த சமுத்திரக்கனி மகன் வினோத் (36) என்பதும், வினோத் மீது பாண்டிச்சேரி ஊதியம் சாலை காவல் நிலையத்தில் லேப்டாப் திருடிய வழக்கு, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ சிவகுமார் அளித்த புகாரின் பேரில் செல்போன் திருடிய வினோத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறிமுதல் செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வினோத்தை சிறையில் அடைத்தனர்.