தேன்கனிக்கோட்டை அருகே சட்டவிரோதமாக கர்நாடக மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது 159 மது பாக்கெட்டுகள் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, ஏ.டி ஒன்னுப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக அண்டை மாநிலமான கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது..
தகவலின் பேரில் கர்நாடகா மது காவல் ஆய்வாளர் கணேஷ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அந்தந்தப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுமன் கர்நாடகா மாநில மது பாக்கெட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 159 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு விற்பனையில் ஈடுபட்ட சுமனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.