ஆன்லைன் மோகம்..! சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது..!

ஆன்லைன் டிரேடிங்கில் பணம் பறிபோனதால் பட்டப்பகலில் வீடு புகுந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னையை அடுத்த கொரட்டூர் கிழக்கு நிழல் சாலை பகுதியில் சுதா ஆறுமுகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். சுதாவின் கணவர் ஆறுமுகம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மனைவி சுதா அவருக்கு உதவியாக வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை சுதாவின் வீட்டின் கதவை மர்மநபர் தட்டியதால் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது., அந்த மர்மநபர் கத்திமுனையில் சுதாவை மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
பின் அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்க்கத்தினர்., மர்ம நபரை மடக்கி பிடித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்மநபர் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பதும் ஏசி மெக்கானிக் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் காவல்துறையின் தீவிர விசாரணையில் கமலக்கண்ணன் சமீப காலமாக ஆன்லைன் டிரேடிங் செய்வதற்காக லட்சக்கணக்கான ரூபாயை கடன் வாங்கி இழந்ததும், அந்த கடனை அடைக்க கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கமலக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News