புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் மகிலா சங்கம் சார்பில் ஆடி மாதத்தில் அஸ்வ பூஜை மற்றும் அஸ்வத் நாராயண பூஜை நடை பெறுவது வழக்கம் இதன்படி தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து குதிரை வரவழைக்கப்பட்டு ஏராளமான பெண்கள் குதிரையின் காலில் பாலபிஷேகம் செய்து குதிரைக்கு பூ மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து, அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் செய்த பெண்கள் கணவன் மனைவி பிரச்சனை தன வழிபாடு ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற ஐதீகத்துடன் குதிரைக்கு பூஜை செய்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகிலா சங்கத் தலைவி முன்னிலையில் சத்யா ரமேஷ்பாபு செயலாளர் இந்திராணி சந்திரசேகர் பொருளாளர் பாக்கியலட்சுமி ரமேஷ் குப்தா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனின் அருளை பெற்றனர்.