நியூயார்க்கில் கடந்த சனிக்கிழமை அன்று Water Edge Rehab மற்றும் நர்சிங் மையத்தில் 82 வயது மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அருகில் உள்ள மயான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சென்ற பிறகு அரை மணிநேரம் கழித்து இறந்து போன மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பதை இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவர் கவனித்துள்ளார். இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாநில சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.