சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பவர் பிரிட்டோ லாரன்ஸ் சேவியர் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சம்பாதித்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியில் கிளப்பில் நடனமாடும் ப்ரீத்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதில் இருவரும் பழகி வந்துள்ளனர்
இந்நிலையில் ப்ரீத்தி பிரிட்டோ லாரன்ஸ் சேவியரிடம் பலமுறை பணங்களை பெற்றுள்ளதாகவும் நகை பணம் இடம் என சுமார் மூன்று கோடி அளவில் பெற்றுக் கொண்டு தற்பொழுது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ யார் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கோரி தன்னை வெறுப்பதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் காவல்துறையினரும் அனைத்து விசாரணை செய்கிறேன் என்று கூறி இருந்ததாக கூறப்படும் நிலையில் தன்னை போன்று ஆண்கள் யாரும் ஏமாறக்கூடாது என்று கூறி செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில் கிளப்பில் நடனம் ஆடிக் கொண்டிருந்த பிரீத்தி தனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும் இதனை அடுத்து கிளப்பில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ப்ரீத்தியை வெளியே கூட்டி வருவதற்கு இந்திய மதிப்பில் 70 லட்ச ரூபாய் கொடுத்து வெளியே கூட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய பொழுது தனது வீட்டில் கஷ்டமாக உள்ளது அந்த கஷ்டத்தை எல்லாம் தீர்ந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சிறுக சிறுக பணம் பெற்றுக் கொண்டுள்ளார் அதன் பின்பு தனது வீடு சரியில்லை வீட்டை கட்ட வேண்டும் என்று கூறி அதற்கும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார் அதன் பின்பு தனது தம்பி இறந்து விட்டார் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி பல லட்ச ரூபாய் பெற்றுள்ளார்
மேலும் தனக்கு வைர நெக்லஸ் வேண்டும் என நகை பணம் என சுமார் மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ யாரென்று எனக்குத் தெரியாது உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை என தன்னை வெறுத்து மனம் புண்படும்படி தகத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளதாகவும் தன்னை போல் எந்த நபரும் ஏமாறக்கூடாது என்பதற்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார் மேலும் தான் இழந்த சுமார் மூன்று கோடி ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்.
அதன் பின்பு பேசிய வழக்கறிஞர் பெண்கள் ஏமாந்தால் மட்டும் பல்வேறு வழக்குகள் போடப்படுகிறது ஆனால் ஆண் ஏமாந்தால் மட்டும் ஏன் எந்த வழக்கும் போட மாட்டீர்கள் இந்த வழக்கு ஆண்களுக்கு ஒரு தீர்வை கிடைக்க வேண்டும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று இந்த வழக்கை தான் எடுத்ததாகவும் கூறியுள்ளார்