மதுரையில் ஆய்வு கூட்டம் நடத்தும் துணை முதலமைச்சர் உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா என அதிமுக ஆர்.பி. உதயக்குமார் கேள்வி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கல்குவாரியிலிருந்து வெளியேறும் மண்துகள்கள், புகைகளால், வீடுகளில் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்கள் வருவதால், தங்களது உயிருக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய விளை நிலங்களும் , மண் துகள்களால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பாதுகாக்கவும், விவசாயிகளின் உயிர் காக்கவும் இந்த கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி, 200 – க்கும் மேற்பட்டோர் திருமால் கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றியும் கோஷங்கள் எழுப்பியும் காத்திருப்பு போராட்டத்தில். ஈடுபட்டனர்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து மக்களுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி, உள்ளிட்ட தொகுதிகளில் கனிம வள கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.
மதுரை வந்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., கனிம வள கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்தாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த நாங்களே சில கோரிக்கைகளை முன் வைக்கும் போது அதனை நிறைவேற்றாத இந்த அரசு சாமானிய மக்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்றும் என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.