2006ம் ஆண்டு தேர்தலின் போது விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது தாக்கத்தை ஏற்படுத்தியது போல 2026ம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிக்கும் தவெக பாதிப்பை ஏற்படுத்தும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் பேட்டி
தஞ்சாவூரில் அமமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெறுவோம் என்பதை தான் தொடர்ந்து கூறி வருகிறேன். வருகிற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் தேர்தலின் போது விஜயகாந்த் தொடங்கிய போது தாக்கத்தை ஏற்படுத்தினார், அதுபோல வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் விஜயின் தவெக பாதிப்பை ஏற்படுத்தும், அதுதான் எதார்த்தமான உண்மை. அதற்காக நான் அந்த கூட்டணிக்கு செல்வதாக அர்த்தம் இல்லை. ஓபிஎஸ் சமாதானப்படுத்துவதற்கு டெல்லியில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார், இந்த பேட்டியின் போது
அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்