வயநாடு நிலச்சரிவு: செஸ் சாம்பியன் குகேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ் வயநாடு நிலச்சரிவிற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் ஆன குகேஷ் உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் வீரராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் முகேஷ் படிக்கும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் செஸ் பேஸ் இந்தியாவின் சிஇஓ சாகர் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவின்போது 220 ஹெலிகேம் மூலம் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வான் கண்காட்சி நடைபெற்றது. அத்துடன் பள்ளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் குகேஷை கவுரவிக்கும் வகையில் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கேரளாவின் வயநாடு நிலச்சரிவுக்கு தனது பங்காக ரூபாய் பத்து லட்சத்தை நிவாரண நிதியாக குகேஷ் அளித்தார்.இது அனைவரையும் நிகழ்ச்சியில் ஆழ்த்தியது.

RELATED ARTICLES

Recent News