சந்திரமுகி படத்தில் ஜோதிகா ரோலில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதிக நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது. இப்படத்தில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் சினேகாவுக்கு கிடைத்தது. ஆனால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

இதுகுறித்து சினேகா அளித்த ஒரு பேட்டியில், சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா நடித்த கங்கா கேரக்டரில் நடிக்க என வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நடிக்க முடியாமல் போனது. அந்தக் கதாபாத்திரத்தில் ஜோதிகா ரொம்பவே சிறப்பாக நடித்திருந்தார் என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News