அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் விசிக நிர்வாகிகள் படுகாயம்…!!

இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் விசிக நிர்வாகிகள் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு தொகுதி துணை செயலாளர் லெனின் ஆகிய இருவரும் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள வி.கே.எஸ் நகர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு மற்றும் தொகுதி துணை செயலாளர் லெனின் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனம் ஒன்றில் துக்கம் விசாரிக்க சென்று கொண்டிருந்தனர் இவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் உள்ள திருப்பு முனைப்பகுதியில் திரும்பிய பொழுது அந்த வழியைச் சென்ற அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் லெனின் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர் இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிரச் சிகிச்சை பெற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டதோடு படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

RELATED ARTICLES

Recent News