விஜய் முதல்வராக வேண்டி 108 தேங்காய் உடைத்த தொண்டர்கள்..!!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் வளையங்குளம் கருப்பசாமி கோவிலில் விஜய் முதல்வராக வேண்டி 108 தேங்காய் உடைத்தனர் இதேபோல் பெண்கள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து நெய்விளக்கு ஏற்றினர்.

மதுரை பாரபத்தியில் நடைபெறும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தொண்டர்கள் வலையன்குளம் கருப்பசாமி கோவிலில் சாமி கும்பிட்டனர்.

பின்பு மாநாடு சிறப்பாக வெற்றியடைய வேண்டி 108 தேங்காய் உடைத்து வேண்டிகொண்டனர். தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வாராரு வாராரு கள்ளழகரு என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் .

இதே போல் வந்த வாசி தொகுதியில் இருந்து வந்த பெண்கள் மண்டியிட்டு விஜய் முதல்வராக வேண்டி விளக்கு ஏற்றினர்.

RELATED ARTICLES

Recent News