கடலூர் மாவட்டம் வேப்பூர் சிறுபாக்கம் மங்களூர் சேப்பாக்கம் திட்டக்குடி விருதாச்சலம் உள்ளிட்ட தாலுகாவில் பல்வேறு இடங்களில் சரியாக இன்று காலை ஒரு 9.30. மணி அளவில் பயங்கர வெடி சத்தத்துடன் கேட்டதாகவும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
அதேபோல கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களும் விவசாயப் பணி செய்து வருபவர்களும் அந்த அதிர்வை உணர்ந்ததாகவும் கூறுகின்றனர்
வெடி சத்தத்துடன் கூடிய அந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் பல்வேறு இடங்களில் கிராம மக்கள் கூறி வருகின்றனர் சில நிமிடங்களே அந்த அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
உண்மையிலேயே அது நில அதிர்வு தானா அல்லது வேறு ஏதேனும் சத்தம் ஏற்பட்டுள்ளதா என்ற வகையிலே ஆய்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையானது எழுந்துள்ளது.