தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் அவா் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் மருத்துவமனையான மியாட் மருத்துவமனை அவா் உடல்நிலை சீராக இல்லையென இன்று முதல் அறிக்கை வெளியிட்டது.இதனைத்தொடா்ந்து,இரண்டாவது அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
இவரின் உடல்நலம் குறித்து தொடா்ந்து மருத்துவ அறிக்கை வெளிவந்து கொண்டிருப்பதால்,விஜயகாந்த் பிரியா்கள் அனைவரையும் இந்த அறிவிப்பானது பதட்டநிலையிலேயே வைத்துள்ளது.