தமிழ் சினிமாவின் நடிகராகவும் ,தேமுதிகவின் தலைவராகவும் இருந்து மறைந்தவா் கேப்டன் விஜயகாந்த்.இவாின் இறப்பிற்கு இன்றுவரை பலரும் தங்களது இரங்கல்களை நேரில் சென்றும் , சமூகவலைதளங்கள் மூலமாவும் தெரிவித்து வருகின்றனா்.
மேலும், இவாின் சமாதிக்கு திரைப்பிரபலங்களான ஐஸ்வா்யா ராஜேஷ் ,சூா்யா என பலரும் நேரில் சென்று கண்ணீா் மல்க இரங்கல் தெரிவித்துவருகின்றனா்.இந்நிலையில், தற்போது நடிகரான ஜெயம் ரவி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளாா்.பின்னா் செய்தியாளா்களை சந்தித்தாா்.அப்போது, நடிகா் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயா் வைக்கலாமா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ஜெயம் ரவி பதிலளித்துள்ளாா்.அதாவது, எனக்கு ரொம்ப சந்தோஷம், அது தான் நியாயமான விஷயமும் கூட என்று கூறியுள்ளாா்.இவாின் இத்தகைய பதிலுக்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.