விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா.முதலில் இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநராக பணிபுரிந்த தீனா, மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் களமிறங்கினார்.
இதனையடுத்து கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தீனாவுக்கு இன்று திருவாரூரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் பலருக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுக்க முடியவில்லை என்றும் திருமண வரவேற்பை ஜூன் 10ஆம் தேதி சென்னையில் வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.