எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் நிற்கும்போது தாக்கத்தை ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் கருத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய 2006 தேர்தலில் தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டி போட்டார். யாருடனும் கூட்டணி இல்லை. ஆகவே விஜய் தற்போது வந்து தனித்து நிற்கும் போது அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்
அமெரிக்காவில் இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு பேசிய அவர்., இதனால் இந்திய தொழிலதிபர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும் எனவும் நம் நாட்டில் தற்போது ஜிஎஸ்டி போன்ற பல வரிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
இது மேலும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு உடனடியாக சரி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றால் நல்ல தேர்தல், வெற்றி பெறவில்லை என்றால் பிரச்னைகள் இருக்கிறது வாக்கு திருடப்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் சரியான தேர்தல் நடப்பது கிடையாது. தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் இதனை சரி செய்ய வேண்டும். நீதி அரசர்கள் தேர்தல் ஆணையம் சேர்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது தேர்தல் வர உள்ளதால் பல அறிக்கைகள் அவர்கள் கொடுத்தாலும் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் இருந்தும் தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் ஆட்சியில் மக்கள் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் ஆகும்.
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது குறித்தான செய்தியாளர்கள் கேள்விக்கு? எப்போது விட்டுக்கொடுத்தோமோ மீனவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆரம்பத்திலிருந்து கேப்டன் கூறியது கச்சதீவு மீட்பு என்பதுதான். அது ஒன்றுதான் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு. நிச்சயமாக இரண்டு நாடுகலளும் ஐநாவில் பேசி நாம் எப்படி விட்டுக் கொடுத்தோமோ அதை திரும்ப பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும் நல்லது நடத்த வேண்டும் என்றார்