இன்ஸ்டாகிராமில் பட்டையை கிளப்பும் தளபதி விஜய்..! இவ்வளவு ஃபாலோயர்ஸா..?

கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது ஒவ்வொரு அசைவுகளும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவதும், பார்க்கப்படுவதும் வழக்கம். தற்போது லியோ படத்தில் தீவிரமாக நடித்துவரும் தளபதி விஜய், அதே சமயம் சில தினங்களுக்கு முன்பு புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கினார்.

ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 2-லட்சத்துக்கு மேலான ஃபாலோயர்ஸ்களை குவித்தார். இதனிடையே துவங்கியது முதல் இன்று வரை சுமார் 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை தொட்டு சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இன்னும் பல பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News