துப்பாக்கி, அஞ்சான் ஆகிய படங்களின் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தவர் வித்யூத் ஜமால். பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வரும் இவர், அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர் இமயமலைக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, நடிகர் வித்யூத் ஜமால், நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை தான், இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள அவர், “நான் என்னை அறியும் முயற்சியாக தான், இந்த பயணம்” என்று கூறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.