கடற்கரை, பூங்காக்கள் என்று எங்கு சென்றாலும், அங்கு காதலர்கள் ஜோடியாக வந்து, தங்கள் காதலை வளர்ப்பது வழக்கம். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, பொது இடங்களில் ஆபாசமாக நடந்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது ஒரு காதல் ஜோடி, நடுரோட்டிலேயே தங்களது லீலைகளை நடத்தியிருப்பது, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் புனோவில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில், சிக்னல் போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, Stop line-க்கு பின்னால் வாகனங்கள் அனைத்தும் நின்றுக் கொண்டு, பச்சை சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த காதல் ஜோடி, நடுரோட்டிலேயே இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, பச்சை சிக்னல் போடப்பட்டதால், தங்களுக்கு வழிவிடும் படி வாகன ஓட்டிகள் கூச்சலிடத் தொடங்கினர். “என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அசையாமல் நின்ற காதல் ஜோடி, போக்குவரத்து காவல்துறையினர் வந்து அழைத்து செல்லும் வரை அங்கேயே விடாப்பிடியாக நின்றுக் கொண்டிருந்தனர்.
இதனால், அந்த பரபரப்பான சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காதல் ஜோடியினர் நடுரோட்டில் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.