இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உடல் நிலையை காரணமாக தன்னுடைய பதவியை நேற்று இரவு திடீரென்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில்., தற்போது அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய முதல் நாளே மக்களவை, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது..
மேலும் ஜெகதீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மத்திய மந்திரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், சிவராஜ் சவுகான் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் அடுத்த துணை ஜனாதிபதி யார்..? என்று இதில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜெகதீப் தன்கருக்கு பிரிவு உபசார உரை நிகழ்த்த வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பங்கேற்றுள்ளார்.