பார்க்கிங்-ஆக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை ஒட்டி சென்னை மாநகர பகுதிகளில் மழை நீரால் அதிகம் பாதிக்கப்படும் வேளச்சேரி மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணிகளை முடித்து விட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்தும், வேளச்சேரி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அச்சம் மீளவில்லை. இதனால் வேளச்சேரி, விஜயநகர், பேபி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொகுசு கார்களை மேடான பகுதிகளில் நிறுத்த தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக வேளச்சேரி மேம்பாலத்தின் இருபுறத்திலும் ஏராளமான சொகுசு கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மேம்பாலத்தின் மீது கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.

மழைநீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்தாலும், மழைநீர் தேங்கும் என்ற அச்சத்தில் தங்களது நான்கு சக்கர சொகுசு கார்களை மேம்பாலத்தின் மீது வேளச்சேரி மக்கள் நிறுத்தி உள்ளனர், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News