நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் திடீர் மரணம்..!

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து வாழ்ந்த வனிதா கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இணையத்தில் பூதாகரமாக வெடிக்க தொடங்கிய நிலையில் சில மாதங்களிலேயே வனிதா பீட்டர் பாலை பிரிந்து விட்டார்.

இந்நிலையில் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News